பிரிட்டனில் ஒரு கார்பரேட் நிறுவனமான லைக்கா முதலாளி அல்லிராஜா சுபாஸ்கரன், இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சென்று, பல கோடி பவுன்கள் வரி ஏய்ப்புச் செய்துள்ளார். வரி ஏய்ப்பு மோசடி ஆதாரத்துடன் நிரூபிக்கப் பட்டுள்ளதால், அது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. பிரிட்டனில் கார்ப்பரேட் வரி கட்டுவதை தவிர்ப்பதற்காக, கணக்கில் வராத தொகையை மோசடி செய்ததில், ராஜபக்ச குடும்பத்தினருக்கும் பங்கிருக்கிறது. ராஜபக்சவின் உறவினர் ஒருவரின் பெயரில் உருவான போலி நிறுவனம், பணப்பரிமாற்றத்திற்கு உதவியுள்ளது. இதன் மூலம் பெருந்தொகையான மோசடிப் பணம், வரியில்லாத தீவொன்றில் வைப்புச் செய்யப் பட்டுள்ளது. லைக்கா முதலாளி அல்லிராஜா சுபாஸ்கரன், பிரிட்டிஷ் அரச மட்டத்திலும் செல்வாக்கு தேடியுள்ளார். அதற்காக, தற்போதைய பிரதமர் டேவிட் கமெரூனின் கன்சேர்வேட்டிவ் கட்சிக்கு £1.3 மில்லியன் நன்கொடையாக (லஞ்சம்?) கொடுத்துள்ளார். லைக்கா நிறுவனம், கடந்த வருடம் மட்டும், உலகளாவிய மொத்த இலாபம் £1.1 பில்லியன் என்று வருமானக் கணக்கு காட்டியுள்ளது. இருப்பினும், அது பிரிட்டனில் பல வருடங்களாக கார்பரேட் வரி கட்டவில்லை. தற்பொழுது இவர்கள் கனடாவில் லிபாறா என்ற பெயரில் கடை விரித்துள்ளனர். கூடவே தமிழ் பாராளுமன்ற வேட்பாளர்களையும் கனடிய ஆங்கிலப் பாராளுமன்றவாதிகளையும் வலை போடும் வேலையில் தமிழர் விழா என்ற போர்வையில் விழா எடுத்து சராசரி கனடியத் தழிழரையும் புழகாங்கிதம் அடையச் செய்துள்ளனர். எமது மக்களும் இவற்றின் பின்புலம் அறியாது புழகாங்கிதத்திற்குள் புகுந்துள்ளனர் (Kalaiyarasan Tha, Saakaran)