கடந்த 22ஆம் திகதி மொனராகலை ஓகந்த தேவாலயத்துக்கு அருகில் வைத்து, கதிர்காம கோவிலின் பஸ்னாயக்க நிலமே டிசான் விக்ரமரத்ன மற்றும் மொனராகலை மாவட்ட அதிபரி குணதாச சமரசிங்க ஆகியோர் யாத்திரிகர்களை வரவேற்றனர்.
அத்துடன் குறித்த யாத்திரிகர்களுக்கு தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்கலதெல பண்டாரவால் உணவு வழங்கப்பட்டது.
ஓகந்த தேவாலயத்துக்கு அருகில் யால தேசிய வனத்தின் ஊடாக கதிர்காமத்தை நோக்கி பயணிக்கும் குறித்த பாதயாத்திரை குழுவினர், இந்த மாதம் 28ஆம் திகதி கதிர்காமம் புனித பூமியை சென்றடைவர்.
இவ்வாறு பாதயாத்திரை மேற்கொள்ளும் குழுவினருக்கான சுத்தமான குடிநீர் வசதி, விலங்குகளிடமிருந்து பாதுகாத்தல் என்பவற்றை பொலிஸாரும் வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் முன்னெடுத்து வருகின்றனர்.