கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழையின் காரணமாக, வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற இடத்தில், நள்ளிரவு 1 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் போதே, அங்கிருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள சூரல்மலை என்ற இடத்தில், நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். 30 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 400க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் நிலவுகிறது.
நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழப்பு 50 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், பாலம் சேதம் அடைந்துள்ளதாலும் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவிப்பதாகத் தெரிகிறது. நிலைமை நிமிடத்துக்கு நிமிடம் மோசமடைந்துவரும் சூழலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் வயநாடுக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட உள்ளனர்.