“வரம்பற்ற 5/6 பெரும்பான்மை வேண்டாம்” -டில்வின் சில்வா

எந்தவொரு தடையுமின்றி அரசாங்கத்தை நடத்துவதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை மட்டுமே தேசிய மக்கள் சக்தி  எதிர்பார்க்கிறது என, கொழும்பில், திங்கட்கிழமை (04) இடம்பெற்ற  செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

எந்தவொரு கட்சிக்கும் அதீத அதிகாரம் வழங்கப்படக் கூடாது என தேசிய மக்கள் சக்தி   தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்னொரு சந்தர்ப்பத்தில் கூறியிருந்த கேள்விக்கு பதிலளித்த சில்வா, தேசிய மக்கள் சக்தி, இப்போதும் அதே கருத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

“எதிர்க்கட்சியை செயலிழக்கச் செய்யும் 5/6 பெரும்பான்மையைப் போல நாங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தத் தேவையில்லை. ஆனால், அரசாங்கத்தை நடத்துவதற்கு பாராளுமன்றத்தில் பலமான பெரும்பான்மை தேவை. அரசாங்கம் சட்டங்களை இயற்றவும் சட்டங்களைத் திருத்தவும் வேண்டும். பலமான பெரும்பான்மை தேவை” என்றார்.