ஐந்தே வருடங்களில் ஒரு படுக்கையறையிலிருந்து 7,000 சதுர அடிகளுக்கு வளர்ந்த யாழ்ப்பாண மென்பொருள் நிறுவனம்
யாழ் ஜீக் சலெஞ் (Yarl Geek Challenge) வடக்கின் பெரும்பாலான தொழில்நுட்ப முயற்சிகளுக்கான நாற்றுமேடை என்பதில் சந்தேகமில்லை. 2022 இல் அது தனது 11 ஆவது போட்டியை நடத்தி முடித்திருக்கிறது. YGC நாற்றுக்கள் இதுவரை 60 நிறுவனங்களின் உருவாக்கத்துக்கும் பலநூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும் காரணமாக இருந்திருக்கின்றன.