வைத்தியசாலை நிர்வாகத்தின் திறமை மற்றும் திறன்களை பயன்படுத்தி சர்வதேச மற்றும் உள்ளூர் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு புதிய மாதிரியில் அதை மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
சுகாதார சுற்றுலாவின் முக்கிய மையமாக நாட்டை நிலைநிறுத்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சர் தனது விஜயத்தின் போது விளக்கினார்.
டொக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி மூலோபாயத்தின் ஒரு பகுதியாக சுதேச மருத்துவத்தை அதன் சேவைகளில் இணைத்துக்கொள்ளும் ஆற்றலையும் அவர் எடுத்துரைத்தார்.
வைத்தியசாலையில் மொத்தமாக 1,002 படுக்கைகள் உள்ளன, 800 படுக்கைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளதுடன், இவற்றில் 440 படுக்கைகள் தினசரி தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.