வற் உள்ளிட்ட கூடுதல் வரிகள் வாகனங்களின் விலையை மேலும் உயர்த்துவதாக சங்கத்தின் தலைவர் பிரசாத் தெரிவித்தார்.
“வாகனத்தின் மதிப்பின் அடிப்படையில் ஒரு சிறப்பு இறக்குமதி வரி உள்ளது, பின்னர் இவற்றுடன் 18% VAT சேர்க்கப்படுகிறது. இந்த கூறுகளை CIF மதிப்புடன் இணைத்து மொத்த வரி கணக்கிடப்படுகிறது,” என்றார்.
வரிகள் அதிகரித்த போதிலும், வாகனங்களுக்கான சந்தை விலைகள் சிறிதளவு உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மக்கள் இது தொடர்பில் குழப்பமடைய வேண்டாம் என்றும், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு நாட்டிற்கு வாகனங்கள் வரும் வரை காத்திருக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.