“வாகன வரிகளைக் குறைக்க முடியாது”

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்ல் திங்கட்கிழமை (24) அன்று உரையாற்றிய அவர், IMF ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் எந்த வரிச் சலுகைகளையும் வழங்க முடியாது என்றும் வெளிப்படையாகக் குறிப்பிட்டார்.

“இந்த ஆண்டு வாகன இறக்குமதியிலிருந்து ரூ. 300 மில்லியன் முதல் ரூ. 350 பில்லியன் வரை ஈட்ட அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

மின்சார மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வாகனங்கள் உட்பட பல்வேறு வாகன மாதிரிகள் நாட்டிற்கு வந்துள்ளன.

இருப்பினும், சுங்க அனுமதி இன்னும் நடந்து கொண்டிருப்பதால், மொத்த வரி வருவாயை அரசாங்கத்தால் இன்னும் கணக்கிட முடியவில்லை,” என்று துமிந்த ஹுலங்கமுவா கூறினார்.

1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் கூறினார்.

Leave a Reply