அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஐந்தாண்டுகளில் பூர்த்தி செய்வதாகவும் சஜித் பிரேமதாச போன்ற சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கூறுவது போன்று ஐந்து வாரங்களுக்குள் நிறைவேற்ற முடியாது எனவும் அவர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.
“நாங்கள் இன்னும் பல முடிவுகளை எடுக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்காகத் திட்டமிடப்பட்ட ஒரு பணியை ஐந்து வாரங்களுக்குள் முடிக்க முடியாது. NPP விஞ்ஞாபனம் ஐந்தாண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட முன்வைக்கப்பட்டதே தவிர, ஐந்து வாரங்களில் அல்ல.
நாங்கள் இன்னும் அரசாங்கத்தையே அமைக்கவில்லை. கடந்த ஐந்து வாரங்களுக்குள் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முக்கிய முடிவுகளை நாம் எடுத்துள்ளோம். அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என எதிர்க்கட்சி பகல் கனவு காண்கின்றது” என அவர் கூறினார்.
நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறியதாகவும், இறுதியில் நாட்டை திவாலான நிலைக்குத் தள்ளியுள்ளதாகவும், தற்போது மூன்று அமைச்சர்கள் மட்டுமே நாட்டை இயக்குவதாகவும் அமைச்சர் கூறினார்.
“நாங்கள் இப்போது ஒரு புதிய பாதையில் பயணிக்கிறோம் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். பொருளாதாரம் திவாலாவதற்கு முக்கிய காரணம் ஊழல் மிகுந்த அரசியல் கலாச்சாரம், மோசடிகள், ஊழல் மற்றும் விரயம் தான்” என்று அவர் மேலும் கூறினார்.