இந்தியா இலங்கையின் நட்பு நாடா அல்லது நவ குடியேற்றவாத நாடா?
இந்தியாவின் இந்துத்துவ வலதுசாரி அரசாங்கமும், இலங்கையின் மேற்கத்தைய சார்பு வலதுசாரி அரசாங்கமும் இரு நாடுகளுக்கிடையிலும் செய்து கொள்ள உத்தேசித்துள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் (Economic and Technical Cooperation Agreement – ECTA) என்ற பெயரிலான உடன்படிக்கைக்கு இலங்கையின் தேசப்பற்றுள்ள அரசியல் சக்திகள் மத்தியிலும், மக்களிடத்திலும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டால். இந்தியாவின் தொழில்நுட்ப வல்லுனர்கள் இலங்கையின் தொழில்நுட்ப, விஞ்ஞானத்துறையில் ஆதிக்கம் செலுத்தவும், நமது பொருளாதாரத்தை இந்தியா கட்டுப்படுத்தவுமான சூழல் நிச்சயம்ஏற்படும் என்ற காரணத்தாலேயே, இலங்கையர்களில் கணிசமானோர் இந்த உடன்படிக்கையை எதிர்க்கின்றனர்.
(https://manikkural.files.wordpress.com/2016/03/vaanavil-63_2016.pdf)