விக்கிலீக்ஸ் இணையத்தளம் வாயிலாக அமெரிக்கா உட்பட பல நாடுகளின் ராஜாங்கம் மற்றும் இராணுவ இரகசியங்களை வெளியிட்ட ஜுலியன் அசான்ஞ்யை கைது செய்ய அமெரிக்கா கடும் முயற்சி மேற்கொண்டு வந்தது. ஆனால், அவர்களிடம் சிக்காமல் 2012 ஆம் ஆண்டு அசாஞ்சே இலண்டனில் உள்ள ஈக்குவடோர் (Ecuador) தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.
சர்வதேச நாடுகளின் விதிமுறைப்படி, தஞ்சம் அளித்துள்ள நாட்டின் தூதரகத்திற்குள் சென்று யாரையும் கைது செய்ய முடியாது. எனவே கடந்த ஏழு ஆண்டுகளாக (2487 நாட்கள்) ஈக்குவடோர் தூதரகத்துக்கு உள்ளேயே தொடர்ச்சியாக காலம் கழித்து வந்தார் அசான்ஞ். ஆனால் 24.05.2017 இல் ஈக்குவடோரின் ஜனாதிபதியாக வந்த லெனின் மொரேனா (Lenín Moreno), ஜூலியன் அசான்ஞ்ற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை ஈக்குவடோர் விலகிக் கொள்கிறதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 48 வயதான ஜுலியன் அசான்ஞ், அவுஸ்திரேலியாவில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்படம் மற்றும் வீடியோ: ஜுலியன் அசான்ஞ் ஈக்குவடோர் தூதரகத்திற்குள்ளிருந்து இழுத்துச் செல்லப்படும் காட்சி.
https://www.youtube.com/watch?time_continue=38&v=stTMt1tLT4g