தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள். இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்துக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிபதிகள், சர்வதேச நிபுணர்கள் ஆகியோர் அடங்கிய கலப்புமுறை நீதிமன்றத்திற்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் உள்ளக பொறிமுறை ஒன்றின் மூலமே போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்படும் என்பதை ஆணையாளர் அல் ஹூசைனிடம் வற்புறுத்த வேண்டும் எனவும் TNAஅமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
அதேவேளை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப உள்ளக பொறிமுறை ஒன்றின் மூலம் போர்க்குற்ற விசாரணையை நடத்த இந்தியா உதவியளிக்கும் என கொழும்புக்கு விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது.