கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட இலங்கையில் இயங்கும் அனைத்து சர்வதேச விமான நிலையங்கள், உள்நாட்டு விமான நிலையங்கள் மற்றும் பிதுருதலாகல ரேடார் நிலைய ஊழியர்களுடன் இந்த தொழிற்சங்கம் இணைந்துள்ளதாக விமான நிலையங்களின் கூட்டு தொழிற்சங்கத்தின் தலைவர் தம்மிக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.
இலங்கையுடன் விமானத் தொடர்புகளைக் கொண்டுள்ள அனைத்து விமான சேவைகளையும் முடக்கி இடையூறு செய்யும் நோக்கில் இந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் கடிதங்களை அனுப்பியுள்ளதாக வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்தகைய நடவடிக்கையை எடுக்க அவர்களுக்கு சட்ட மற்றும் தார்மீக உரிமை இல்லை என்று கூறிய தலைவர், இந்த முறைகேடு குறித்து முறையான விசாரணை நடத்துவதற்காக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கட்டாய விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும், விமான நிலைய நுழைவு அனுமதிப்பத்திரங்கள் மற்றும் சேவைக்காக பயன்படுத்திய சகல உபகரணங்களையும் தமது திணைக்களத் தலைவர்களிடம் ஒப்படைக்குமாறு தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் முடியும் வரை அவர்கள் விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் எந்த வளாகத்திலும் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.