ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான செலவை ஏற்க நிறுவனங்கள் இருப்பதாகவும் அதற்கு ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை உதாரணமாகச் சுட்டிக்காட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு கொடுப்பனவும் பெறாமல் தேர்தல் கடமைகளில் ஈடுபடத் தயார் என அரச அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்துள்ளதால், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தலை நடத்துவது பெரிய பிரச்சினையாக இருக்காது என மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.