சமீப காலமாக ரூபாய்க்கு நிகரான டொலரின் மதிப்பு வேகமாக அதிகரித்து வந்ததாகவும் தற்போது டொலரின் பெறுமதி ஓரளவுக்கு குறைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டில், இலங்கையால் சுமார் 800,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டது, அதற்காக அரசாங்கம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட வேண்டியிருந்தது.
ஆனால் 2023ல் ஒரு அரிசி கூட இறக்குமதி செய்யப்படவில்லை, 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளில் இந்நாட்டு விவசாயிகள் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் சேமித்துள்ளனர்.
அத்துடன், 2023ஆம் ஆண்டிலும், 2024ஆம் ஆண்டிலும், இந்நாட்டு மக்கள் உள்நாட்டு அரிசியையே உட்கொள்வார்கள், இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை அல்ல, அந்த மரியாதையும் பெருமையும் இலங்கை விவசாயிகளுக்குச் சேர வேண்டும்.
விவசாயிகளின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்ளும் சில அரசியல் குழுக்களின் பிரதிநிதிகள் விவசாயிகள் போல் நடித்து விவசாயத்தை சீர்குலைக்க முயல்கிறார்கள், ஆனால் விவசாயிகள் இந்த வலையில் சிக்குவதில்லை.
இந்த பெரும் பருவத்துக்கான அதிகூடிய நெல் அறுவடை உடவளவ வலயத்தில் பதிவாகியுள்ளதாகவும், இலங்கையில் முதல் தடவையாக ஒரு ஹெக்டேயரில் 12,000 கிலோகிராம் அரிசியை விவசாயிகள் அறுவடை செய்ய முடிந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கீரி சம்பா பயிர்ச்செய்கையை நாடு முழுவதும் பரப்ப முடிவு செய்துள்ளோம். காரணம், தற்போது கீரி சம்பாவின் விலையை அரசோ, அரிசி ஆலை உரிமையாளர்களோ நிர்ணயம் செய்யவில்லை. கீரி சம்பா அரிசி பயிர்செய்கையால், முதன்முறையாக அரிசியின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் விவசாயிகளின் கைகளுக்கு வந்துள்ளது” என்று அமரவீர கூறினார்.
கீரி சம்பா நெல் ஒரு கிலோகிராம் ரூ.130 என அரசு அறிவித்தது. தனியார் துறை அரிசி ஆலை உரிமையாளர்கள் ரூ.140க்கு வாங்க தயாராக உள்ளனர். . ஆனால் விவசாயிகள் அரிசி ரூ. 150ற்கு மேல் விலை உயரும் வரை விற்காத நிலையை அடைந்துள்ளனர்.
கீரி சம்பா அரிசியை இன்று ஒரு கிலோ ரூ. 350க்கும் வாங்க நுகர்வோர் தயாராக உள்ளனர். தற்காலத்தில் விவசாயி அதிக வருமானம் பெற வேண்டுமாயின் சந்தையில் அதிக கேள்வி உள்ள பயிர்களை இனங்கண்டு உற்பத்தி செய்ய வேண்டும்” என்று கூறிய அமைச்சர், இலங்கையில் விவசாயிகள் அவ்வாறானதொன்றை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது நல்ல அறிகுறியாகும் என தெரிவித்தார்.