நாம் வட மாகாணத்துக்கு சி.வி.கே. விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியதால் இப்போது வடமாகாணத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல விலாசம் இல்லாத தெரியாத பிள்ளையான் இப்போது எப்படி ஆகிவிட்டான். அவனை சிறையில் அடையாது விட்டிருந்தால் அவன் இப்பொழுது எவ்வளவு வளர்ந்திருப்பான். அவனிடம் பெரிதாக என்ன இருந்தது.
ஆக ஒன்றே ஒன்றுதான். அதாவது அவன் முதலமைச்சராக இருந்ததுதான். இதன் பலனாக அவன் தனக்கு ஒரு பலமான வாக்கு வங்கியை ஏற்படுத்திக் கொண்டான். இந்நிலை இனி ஒருபோதும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று விடக்கூடாது. எந்த ஒரு தமிழனும் கிழக்கு மாகாணத்திற்கு முதலமைச்சராக வர அனுமதிக்க மாட்டேன். என்னால் முடிந்த முட்டுக்கட்டையை ஏற்படுத்திக் கொண்டே இருப்பேன். யாரோ எவனோ சிங்களவனோ முஸ்லிமோ முதலமைச்சராக வந்து விட்டு போகட்டும்.
அதனால் நமது கதிரைக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. துரைராஜசிங்கம் போன்ற ஒரு சாக்கனை வைத்துக் கொள்வதால் நமக்கு எந்த பிரச்சனையும் வர மாட்டாது. அவன் எந்தக் காலத்திலும் மக்களின் செல்வாக்கைப் பெறப்போவதும் இல்லை பெற்று ஒரு அரசியல் பிரமுகராக வரப்போவதுமில்லை. அதனால்தான் அவனை செயலாளராக தொடர்ந்து இருக்க ஏற்பாடு பண்ணி இருக்கேன்” என்றவாறு இந்தக் கிழட்டு சம்பந்தன் கூறியதை அந்த உள்வட்ட மையம் பொறுக்கமுடியாமல் நமது உளவாளிகளிடம் கொட்டிவிட்டு போயிருக்கிறார்.
எப்படி இருக்கிறது கிழக்கு மாகாணத்தின் நிலைமை என்று பாருங்கள். “பொண் செத்தவனிடம் குமரை கொண்டு போய் அடைக்கலம் கொடுத்தானாம் கோவிந்தன்”. அப்புறம் என்ன எல்லாம் கோவிந்தா கோவிந்தா தான். இவ்வாறுதான் கிழக்கு தமிழர்களின் நிலையும். கிழக்கு தமிழன் எக்கேடாவது கெட்டுப் போகட்டும். நமது கதிரைக்கு எந்த ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று கனவு கண்டு கொண்டிருக்கிறான்.