சொத்துப் பிரச்சினையொன்றை எதிர்கொள்வதற்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு பயணமாகி பின்னர் பொழுதுபோக்குக்காக அங்கு தங்கிய நாடாளுமன்ற நன்னடத்தை செயற்குழுவின் தலைவர் பதவியிலிருந்து டேவிட் ஸ்வீட் இராஜினாமா செய்துள்ளதாக அவரது கன்சவேட்டிவ் கட்சித் தலைவர் எரின் ஓ டூலேயின் அலுவலகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
ஹவாய், பிரித்தானியாவுக்கு பயணித்ததையடுத்து மாநகர விவகார அமைச்சர் ட்ரேசி அலர்ட்டின் இராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாகவும், தனது பணியாட்தொகுதியின் தலைவர் ஜேமி ஹக்கபியை பதவி விலகுமாறு கோரியுள்ளதாக மேற்கு மாகாணமான அல்பேர்ட்டாவின் பிரதமர் ஜேஸன் கென்னி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மத்திய, மாகாண அரசாங்கங்களால் விடுக்கப்பட்ட கொவிட்-19 பயண எச்சரிக்கைகளை மீறி வெளிநாடுகளுக்கு விடுமுறைகளுக்கு பயணித்த அல்பேர்ட்டா ஆளும் கட்சியான ஒன்றிணைந்த கன்சவேர்ட்டிவ் கட்சியின் ஐந்து மாகாண சபை உறுப்பினர்கள் பதவியிறக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கலிபோர்னியாவுக்கு விஜயம் செய்த நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோ ஹர்கிறேவ்வின் இராஜினாமைவைத் தான் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஸஸ்கசெவான் பிரதமர் ஸ்கொட் மொயி தெரிவித்துள்ளார்.