வெளியிடப்பட்ட அதிர்ச்சி ஆவணங்கள்… பீதியில் டிரம்ப்

அப்போது நடந்துமுடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்க ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் பெரும்பான்மை தொகுதிகளைப் பெற்று வெற்றி வாகை சூடினார். அமெரிக்க தேர்தல் ஆணையம் வாக்குகளை எண்ணிவந்த நிலையில் ஜோ பைடன் முன்னணி வகித்ததையடுத்து அதனை தாங்கிக்கொள்ள முடியாத டொனால்டு டிரம்ப், வாக்குப் பதிவில் முறைகேடு நடந்திருப்பதாகவும் பிற நாடுகளுடன் உள்ள சட்ட விரோத தொடர்புகள் காரணமாக கணினி முறைகேடுகள் நடந்ததாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பைடன்மீது முன்வைத்தார்.
மேலும் அமெரிக்க காங்கிரஸ் டொனால்ட் டிரம்ப் பதவி விலகக்கோரியும் தனது பதவியை இராஜினாமா செய்ய மறுத்தார். இதுபோன்ற பல அடாவடி செயல்களில் ஈடுபட்ட டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்களும் அமைதியாக இருக்கவில்லை. வெள்ளை மாளிகையில் சுவர் ஏறி குதித்து இவர்கள் செய்த கலவரம் அப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது.

இந்நிலையில் தனது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அதிகாரம் கைமாறும் முன்னர் டொனால்ட் ட்ரம்ப் எந்த நிலைக்கும் செல்ல துணிந்தார். இதனையடுத்து வாக்கு எந்திரங்களை கையகப்படுத்த ராணுவத்துக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவிட்டார். வெள்ளை மாளிகையில் இருந்து இந்த உத்தரவு ராணுவத் தலைமைக்கும் சென்றுள்ளது. அரசு ஆவண காப்பகத்தில் இந்த ஆவணங்கள் இந்நாள்வரை பாதுகாக்கப்பட்டன. இந்நிலையில் சமீபத்தில் இவை வெளியிடப்பட்டுள்ளன.

வாக்கு இயந்திரங்களை கைப்பற்றி அதனை முழுவதுமாக அழித்துவிட்டு தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள டிரம்ப் முயற்சி மேற்கொண்டிருக்கிறார் என்று பலர் தற்போது குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களும் டிரம்ப்மீது கடும் அதிருப்தியில் உள்ளதால் அவர் தற்போது பீதி அடைந்துள்ளார்.