ஈபிடிபி குழுவினர் செய்துள்ள மாபெரும் ஊழல் / கடந்த ஜுலை 31 ம் திகதி வரைக்கும் ஈபிடிபி யீனரின் ஆளுகைக்குள் செயற்பட்ட வேலணை பிரதேச சபையினால்புங்குடுதீவு மு ற்றவெளி பகுதியில் இப்படத்தில் காணப்படும் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது . கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக இவ்வாறான நிலையிலே காணப்படுகிறது பல கோடி பெறுமதியான மக்களின் வரிப்பணம் இக்கட்டடத்தினுள் முடக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு முதலாம் வட்டாரத்திலே வழமையான சந்தை காணப்படுகின்றது. அச்சுற்றுப்புற சூழலினை சந்தையடி என்றே காலாகாலமாக அழைப்பர் . இந்நிலையில் ஈபிடிபி தலைமையிலான வேலணை பிரதேச சபையினர் சிறிய மழைக்கே பல மாதங்கள் வெள்ளம் தங்ககூடிய முற்றவெளி பகுதியில் புதிய சந்தையொன்றினை அமைக்க முனைந்துள்ளனர்.
மிகவும் இலாவகமாக பல மில்லியன் ரூபாய் பணத்தினை ஈபிடிபி குழு தமது பொக்கற்றினுள் போட்டுள்ளனர். ஆகவே இப்பகல்கொள்ளையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு ( TNA ) உடனடியாக இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டுசெல்வது அவசியமாகும். ஆனாலும் அவர்கள் அதை செய்யாதது பலரிடமும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில முண்ணணித்தலைவர்கள் இன்னமும் ஈபிடிபி க்கு பயப்படுகின்றனர் என்பது புலப்படுகிறது. என்னவோ டக்ளஸ் தேவானந்தவை நண்பர் டக்ளஸ் தேவானந்த என்றே நட்புடன் பயத்துடன் அழைக்கின்றனர். உங்களுக்கு டக்கிளஸ் நண்பராகயிருக்கலாம்? ஆனால் தீவகத்தில் அவர்கள் செய்த அழிவை இவர்கள் உணர்வார்களா?
அண்மைக்காலங்களில் கூட்டமைப்பின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே ஈபிடிபி மீதான குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துள்ளனர் – வெளிப்படுத்தியிருந்தனர். ஏனையவர்கள் எல்லாவற்றினையும் அடக்கிவைத்துக்கொண்டு உலாவுகின்றனர். பல முன்ணணி நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் காலத்தில் விளாசித்தள்ளினார் ஆனால் இன்று பலர் ஓய்வில். ஆனாலும் தேர்தலின் பின்னர் அவர் ஈபிடிபி குறித்து வாய்திறப்பதேயில்லை. நடப்பு வட மாகாண சபையில் பல இளம் மாகாண சபை உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஈபிடிபி குறித்து மூச்சு கூட வெளியிடுவதில்லை. அவர்களை சொல்லிக் குற்றமில்லை. ஏனெனில் தமது இளம் மனைவிமாருக்கும் குழந்தைகளுக்கும் ஏதாவது ஏற்பட்டு விட்டால்? இவ்வாறான சுயநலவாதிகளுக்கு நான் வழங்கும் ஓரே ஆலோசனை என்னவெனில் தயவுசெய்து பதவியிலிருந்து விலகி உணர்வுள்ள இளைஞர்களுக்கு வழிவிட்டு குடும்பத்தினை கவனிக்கச் செல்லவும்.
(Kunalan Karunagaran – [JVP NEWS])