சந்தையில் உள்ளூர் அரிசிக்கான கேள்வி குறைந்திருப்பதற்கான காரணங்களை விரிவாக ஆராய வேண்டும்.
மானியமாக வெளிநாடுகளிலிருந்து கிடைத்த அரிசியும் இந்த விலை வீழ்ச்சிக்குப் பங்களித்திருக்கிறது. அரசாங்கத்தின் விவசாயக் கொள்கை மற்றும் அரிசி இறக்குமதி நடவடிக்கைகளும் இதில் பாதிப்பைச் செலுத்துகின்றன.
இன்னொரு பக்கம், நாட்டு மக்கள் அரிசிப் பாவனையைக் குறைத்து விட்டார்கள் போல் தெரிகிறது. பொருளாதார நிலமை காரணமாக, வேறு உணவுத் தெரிவுகளை நோக்கி நகர்ந்திருப்பதை உணர முடிகிறது.
நெல் உற்பத்தி செய்யும் பலரோடும் அரிசி வியாபாரிகளுடனும் பேசியதில், இந்தப் போகம் கையைக் கடிக்கும் என்று இப்போதே தெரிகிறது.
உரிய விலை கிடைக்காததால் பலரும் நெல்லைக் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கின்றனர். விலை கிடைத்த பாடும் இல்லை; நெல்லை விற்ற பாடும் இல்லை.
‘வரவு எட்டணா செலவு பத்தணா’ நிலவரம்தான். விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு தொடர்ச்சியாக அடி மேல் அடிதான்.
என் சொந்த அனுபவமும் இதுதான்.
இலங்கை எப்போது விவசாயத்தை ஊக்குவிக்கும் நாடாக மாறும்?
தீர்க்கமான பதில்கள் இல்லை. வழக்கம் போல் கேள்விகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.
(Siraj Mashoor)