அத்துடன், ‘அகிம்சை வழியில் போராட விவசாயிகளுக்கு உரிமை உள்ளது. ஆனால், அந்தப் போராட்டம் மற்றவர்களின் அடிப்படை உரிமை களைப் பாதிக்கும் வகையில் வரம்பு மீறக் கூடாது’ என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் மூன்றாவது வாரமாக டில்லியை முற்றுகையிட்டு போராடி வரும் நிலையில், அவர்களை வெளியேற்ற உத்தரவிடக் கோரி ஏராளமான பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை புதன்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘மத்திய அரசுக்கும் – விவசாயிகளுக்கும் இடையேயான முட்டுக்கட்டைக்குத் தீர்வு காண நீதிமன்றமே குழு ஒன்றை அமைக்கவும், அந்தக் குழுவில் மத்திய அரசு அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறச் செய்வது என்று உத்தேசமாக முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று கூறியுள்து.