இதனால் பங்களாதேஷில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்கால அரசு அமைந்ததும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும், அவரது கட்சிக்கு எதிராகவும் பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் பிரிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை தாக்குதலில் மாணவர் பிரிவு ஈடுபட்டதாலேயே, இந்த மாணவர் பிரிவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக, இடைக்கால அரசு தெரிவித்தள்ளது.