இந்நிலையில், ஆலை சுற்றி நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையில் நாளாந்தம் 500 தொன் ஒக்சிஜன் உற்பத்தி செய்ய முடியுமென்றும் அங்கு உற்பத்தி செய்யும் ஒக்சிஜனை அரசுக்கு இலவசமாக வழங்கத் தாயாராக உள்ளதாகவும் கூறி ஆலையை மீண்டும் இயக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதத்திற்கு தற்காலிகமாக திறப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு, தமிழக முதல்வர் எட்டபாடி பழனிசாமி தலைமையில், இன்று கூடிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆலையை ஆய்வு செய்ய தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.