ஸ்பெயினில் வெள்ளம்: 95 பேர் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை (30) பெய்த அடைமழை காரணமாக, மலாகாவில் இருந்து வாலென்சியா வரை  வெள்ளக்காடாக காட்சியளித்தன.

பொலிஸ் மற்றும் மீட்புப்படையினர் ஹெலிகொப்டர் உதவியுடன் வெள்ளத்தில் தவித்த மக்களை காப்பாற்றினர்.

வாலென்சியாவில் உள்ள 12க்கும் மேற்பட்ட நகரங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாக, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்தள்ளார்.

 பாதிக்கப்பட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மீட்புக் குழுவினர் மற்ற பகுதியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர்