ஸ்பெய்ன் நாட்டின் சரித்திர புகழ் பெற்ற பார்சிலோனா நகரத்தின் லாஸ் ராம்ப்லாஸ் மாவட்டத்தின் (Las Ramblas district) மக்கள் நிறைந்திருந்த நடைபாதையொன்றிற்குள் வெள்ளை நிற வேன் ஒன்று வேண்டுமென்றே சற்று முன்னர் புகுந்து ஓடியதில் இதுவரை 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஸ்பெயின் நாட்டு ஊடகங்களினால் இது ஒரு பயங்கரவாத நடவடிக்கையினை வர்ணிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இதுபற்றிய உத்தியோகபூர்வமான தகவல் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை. இந்த மிக மோசமான தாக்குதலினால் மிகப் பலர் கடுமையான காயங்களுக்குள்ளாகியிருக்கின்றனர்.
தாக்குதல்தாரிகள் அங்கிருந்த ஒரு மதுபானச்சாலைக்குள் புகுந்து கொண்டு துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவ இடத்தில் ஆயுதப் படையினரும் அவசர சிகிச்சைப் பிரிவினரும் பெருமளவில் திரண்டுள்ளனர். குறிப்பிட்ட இடத்திலிருக்கும் சாதாரண பொது மக்கள் அங்கிருந்து அகன்று செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.