
(வி.ராம்ஜி)
சினிமா என்பது பொழுதுபோக்கு சாதனம். ஆனால் இதில் உள்ள இயக்குநர்களையோ தயாரிப்பாளர்களையோ, இசையமைப்பாளர்களையோ ஒளிப்பதிவாளர்களையோ, நடிகர்களையோ நடிகைகளையோ… ஓர் கலைஞராக, திறமைசாலியாக மட்டுமே நாம் பார்ப்பதில்லை. மனசுக்குள் இடமிட்டு, ஓர் சிம்மாசனத்தையும் போட்டு, அமரவைத்து அழகுபார்க்கிறோம். அவர்கள் அமரர்களாகிவிட்ட போதும், அந்த இடம் அவர்களுக்குத்தான்! அப்படியொரு இடத்தைப் பிடித்தவர்களில் ஒருவர்… ஸ்ரீவித்யா.
மிகப்பெரிய இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவர் ஸ்ரீவித்யா. இவரின் தாயார் எம்.எல்.வசந்தகுமாரி என்கிற எம்.எல்.வி. கர்நாடக சங்கீத உலகின் தனிப்பெருங்குயில். அப்பேர்ப்பட்ட பாரம்பரியக் குடும்பத்தில் இருந்து திரையுலகுக்கு வந்தார் ஸ்ரீவித்யா.