ஹஜ் யாத்திரையின் போது மேற்கொள் ளப்படும் பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து மறு ஆய்வு செய்யும்படி சவூதி அரேபிய மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். புனித மக்கா நகருக்கு அருகில் வியாழனன்று ஏற் பட்ட நெரிசலில் சிக்கி 717 யாத்திரிகர்கள் கொல்லப்பட்ட மோசமான அனர்த்தத்தை அடுத்தே மன்னர் இந்த உத்தரவை பிறப்பித் துள்ளார். மினாவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் 863 பேர் காயமடைந்தனர். இஸ்லாத்தில் ஐந்தாவது கடமையான ஹஜ் ஜpல் இம்முறை இரண்டு மில்லியன் யாத்திரிகர் கள் பங்கேற்றுள்ளனர்.ஹஜ் யாத்திரையில் கடந்த 25 ஆண்டுக ளில் இடம்பெற்ற அதிக உயிர்ப்பலி கொண்ட அனர்த்தமாக இது பதிவானது.
இந்நிலையில் யாத்திரிகர்களின் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்துவதிலும், நிர்வகிப்பதிலும் மேலும் முன்னேற்றம் தேவை என்று மன்னர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எனினும் கடந்த இரண்டு வாரத்திற்குள் ஹஜ் கடமையை ஒட்டி புனித மக்கா நகரில் இடம்பெறும் இரண்டாவது அனர்த்தம் இது வாகும். முன்னர் மக்கா பெரிய பள்ளிவா சலில் கிரேன் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 109 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசா ரணை நடத்த சவூதி முடிக்குரிய இளவரசர் முஹமது பின் நயெப் உத்தரவிட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை, மினாவில் யாத்திரிகர் களுக்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி களை சந்தித்தபோதே நயெப் விசாரணைக் கான அறிவிப்பை விடுத்தார். சவூதி ஹஜ் குழுவின் தலைவராகவும் நயெப் செயற்படுகிறார்.
இந்த விசாரணை மூலம் கண்டறியப்படும் விடயங்கள் மன்னர் சல்மானிடம் வழங்கப் படும் என்றும் அவர் உரிய நடவடிக்கை எடுப் பார் என்றும் சவூதி செய்திச் சேவை குறிப் பிட்டுள்ளது.
மினாவின் ஐந்து மாடி கொண்ட ஜமரத் பாலத்திற்கு அருகில் வைத்து இரு திசைக ளில் வந்த பாரிய யாத்திரிகர்களின் வரிசை சந்தித்தபோது ஏற்பட்ட நெரிசலிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மக்காவில் இருந்து ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் இருக்கும் மிகப்பெரிய பள்ளத்தாக் கொன்றான மினாவுக்கு யாத்திரிகர்கள் பய ணிப்பது ஹஜ் கடமையில் ஓர் அம்சமாகும். இதன்போது ஜமரத் என்று அழைக்கப்படும் தூண்களுக்கு யாத்திரிகர்கள் ஏழு கற்களை எறியும்; சடங்கு இடம்பெறும். தீமைக்கு எதி ராக சாத்தானுக்கு கல்லெறியும் நிகழ்வாக இது கருதப்படுகிறது.
இந்த சடங்கை மேற்கொள்ள ஐந்து மாடி கள் கொண்ட ஜமரத் பாலத்தின் ஊடே யாத் திரிகர்கள் பயணிக்கின்றனர். இந்த பாலம் ஒரு பில்லியன் டொலருக்கும் அதிக செலவு செய்து அதிக பாதுகாப்பு கொண்டதாக கடந்த ஒரு தசாப்தத்தில் கட்டப்பட்டதாகும். இந்த பாலத்தின் ஊடே மணிக்கு 300,000 யாத்திரி கர்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.
எனினும் அனர்த்தம் இடம்பெற்ற இடத்திற்கு அசாதாரணமான எண்ணிக்கையில் யாத்திரிகர் கள் வந்ததற்கான காரணம் இன்னும் தெரிய வில்லை என்று சவூதி உள்துறை அமைச் சின் பேச்சாளர் மேஜர் nஜனரல் மன்சூர் அல் துர்கி குறிப்பிட்டுள்ளார்.
உள்@ர் நேரப்படி வியாழன் காலை 9 மணிக்கே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கடுமையான வெப்பம் மற்றும் யாத்திரிகர் களின் களைப்பு ஆகிய காரணங்களாலேயே அதிக உயிர்ப்பலி நேர்ந்திருப்பதாக nஜனரல் துர்கி குறிப்பிட்டுள்ளார். வியாழனன்று மினா வில் 46 செல்சியஸ் அளவுக்கு வெப்பம் தாக்கியது.
“சக்கர நாற்காலியில் இருப்பவரின் மேலால் ஒருவர் பின் ஒருவர் செல்வதை நான் கண்டேன். இவ்வாறு பலரும் ஏறிச்சென்றார்கள்” என்று அங்கிருந்த எகிப்து நாட்டு யாத்திரிகர் அப் துல்லாஹ் லுத்பி ஏ.பி. செய்திச் சேவைக்கு விபரித்துள்ளார். “மூச்சு விடுவதற்காகவே ஒருவர் மேல் ஒருவர் ஏற முயன்றார்கள்” என் றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பல டஜன் யாத்திரிகர்களின் உடல்கள் நிலத்தில் சிதறிக் கிடப்பதும் சில யாத்திரிகர்களது சடலங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக குவிந்து இருப்பதும் அனர்த்தம் இடம் பெற்ற இடத்தில் எடுக்கப்பட்ட படங்கள் காண்பிக்கின்றன.
“எனது கண்களால் பார்க்க முடியாத தூரத் திற்கு இறந்த சடலங்கள் நீண்டு காணப்படு கின்றன” என்று மினாவில் இருக்கும் பி.பி.சி. செய்தியாளர் ஒருவர் விபரித்திருந்தார்.
நெரிசல் தொடர்பாக சவூதி அரேபிய சுகா தாரத் துறை அமைச்சர் காலித் அல் பாலிக், இந்த அனர்த்தத்திற்கு யாத்திரிகர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார். புனித பயணம் மேற் கொண்டவர்கள் அதிகாரிகள் வழங்கிய கால அட்டவணையை மதிக்காமல் சென்றதன் காரணமாக நெரிசல் நேரிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் யாத்திரிகர்கள் இதனை நிராகரித் துள்ளனர். “அங்கு நெரிசல் ஏற்பட்டபோது பொலிஸார் அனைத்து நுழைவாயில் மற்றும் வெளியேறும் வாயில்களையும் மூடி இருந்தனர்” என்று இந்த நெரிசலில் இருந்து தனது தாயுடன் தப்பிய லிபியாவின் 45 வயது அஹ மது அபூபக்கர் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் இருந்த பொலிஸாருக்கு என்ன செய்வது என்பது கூட தெரியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். “அங்கி ருக்கும் வீதிகள் இடங்கள் பற்றிக் கூட பொலி ஸாருக்கு தெரிந்திருக்கவில்லை” என்றார்.
“ஹஜ் ஜpற்காக சவூதி அதிகம் செலவிடுகிறது ஆனால் எந்த ஒரு ஒழுங்கமைப்பும் இல்லை” என்று எகிப்து நாட்டு யாத்திரிகர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சாத்தானுக்கு கல்லெறியும் ஆன்மீக சடங்கு நேற்று வெள்ளிக்கிழமை மற்றும் இன்று சனிக் கிழமையும் இடம்பெறுகிறது. எனினும் வியாழக் கிழமை இடம்பெற்ற அனர்த்தத்திற்கு பின் யாத்திரிகர் சிலர் தமது பயத்தை வெளி யிட்டுள்ளனர். “நாளைக்கு செல்ல நாம் பயப் படுகிறோம்” என்று ஹஸன் என்ற யாத்திரி கர் கடந்த வியாழனன்று குறிப்பிட்டிருந்தார். “இரவில் கல்லெறியும் சடங்கை செய்யப் போகிறேன். அது பற்றி மதத்தலைவரிடம் கேட்ட போது அதில் பிரச்சினையில்லை என்று குறிப்பிட்டார்” என்று அவர் தெரிவித்தார்.
சவூதி அரேபிய நிர்வாகம் யாத்திரிகர் களை கையாளும் விதம் குறித்து ஈரான் கடுமையாக கண்டனம் வெளியிட்டுள்ளது. மரணித்த யாத்திரிகர்களுக்காக மூன்று நாள் தேசிய துக்க தினத்தை அறிவித்த ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயாதுல்லாஹ் அலி கமைனி, “துன்பகரமான இந்த சம்பவத்திற்கு சவூதி அரசு பொறுப்பேற்க வேண்டும். தவ றான நிர்வாகம் மற்றும் முறையற்ற நட வடிக்கைகள் பேரனர்த்தத்தை ஏற்படுத்தியிருக் கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த அனர்த்தத்தில் பலியானோரில் அதி கமானவர்கள் சவூதி அரேபியாவின் பிராந் திய எதிரி நாடான ஈரானைச் சேர்ந்த யாத் திரிகர்களாவர். பலியான ஈரானியர்களின் எண் ணிக்கை 131ஐ தொட்டுள்ளது.
சவூதிக்கு எதிராக ஏனைய இஸ்லாமிய நாடுகளும் எதிர்ப்பை வெளியிட வேண்டும் என்று ஈரானிய தேசிய பாதுகாப்பு குறித்த பாராளுமன்றக் குழுவின் தலைவர் இலதின் பொரவ்ஜர்தி குறிப்பிட்டுள்ளார். மறுபுறம் சவூதி சுகாதார அமைச்சர் யாத்திரிகர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டை நைஜPரியா நிராகரித்துள்ளது.
எனினும் இந்த விபத்திற்கு கவலை வெளி யிட்டிருக்கும் பாப்பரசர் பிரான்ஸிஸ் முஸ்லிம்களு டன் நெருக்கம் கொண்டிருப்பதாகவும் குறிப் பிட்டுள்ளார். அமெரிக்கா உட்பட பல நாடு களும் கவலையை வெளியிட்டுள்ளன.
இந்த மோசமான விபத்தில் ஈரானை அடுத்து அதிகபட்சமாக மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த 87 யாத்திரிகர்கள் கொல்லப்பட் டுள்ளனர். இந்தியாவின் 14 யாத்திரிகர்கள், பாகிஸ்தானின் 6 யாத்திரிகர்கள், துருக்கி யின் 4 பேர், இந்தோனே’pயாவின் மூவர் மற்றும் கென்யாவின் மூவர் உயிரிழந்தி ருப்பது உறுதியாகியுள்ளது. நைகர், சாட் என்று பல நாடுகளின் யாத்திரிகர்களும் உயிரிழந்திருப்பதோடு எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படவில்லை.
இதற்கு முன்பாக 2006ஆம் ஆண்டில் கல் லெறியும் சடங்கின்போது ஏற்பட்ட நெரிசலில் 364 பேர் உயிரிழந்தனர். 1997இல் அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 343 யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். 1999இல் புனித தலங் களை நோக்கிச் செல்லும் குகைகளில் ஏற் பட்ட நெரிசலில் 1426 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 1921 ஆம் ஆண்டு ஹஜ் கட மைக்கு உலகெங்கும் இருந்து சுமார் 57,000 பேர் வரையில் சென்றிருந்தபோதும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அது 3.2 மில்லியன் பேராக உச்சத்தை எட்டியது. யாத்திரிகர் களுக்கான பாதுகாப்பு மற்றும் இட வசதி களை மேற்கொள்ள சவூதி நிர்வாகம் மக்கா மற்றும் மதீனா புனித நகரங்களில் கடந்த பல ஆண்டுகளாக பாரிய விரிவுபடுத்தும் கட்டுமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.