ஹட்டன் பஸ் விபத்து: அதிர்ச்சித் தகவல் வெளியானது

குறித்த பரிசோதனையில், பஸ் சாரதியின் கதவு பூட்டு பழுதடைந்ததால், திடீரென கதவு திறந்ததால், சாரதி இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது.

ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய பிரதான மோட்டார் வாகன பரிசோதகரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பஸ் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸின் இருக்கைகள் தரமான முறையில் அமைக்கப்படாததால், அனைத்து இருக்கைகளும் கழன்று ஒன்றுடன் ஒன்று மோதி பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தரமற்ற நிலையில் இருந்த பஸ்ஸை இயக்க அனுமதித்த பஸ்ஸின் உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹட்டன் பொலிஸார் அறிவித்துள்ளனர். 

Leave a Reply