இந்த நொய் டிவியில் நடக்கும் எடிட்டிங் வேலை எப்படி …… ஒரு தொலைபேசி உரையாடலில் ரஞ்சன் ஹலோ என்கிறார். இந்த ஹலோவுடன் வேறெங்கோ பேசியதை கொண்டு வந்து இதோடு சொருகுகிறார்கள். இதோ ரஞ்சன் இருக்கிறார். நான் திலிப் (தெரண உரிமையாளர்) தூள் கொண்டு வருவதாக எப்போதாவது பேசியுள்ளேனா? இல்லை. இந்த நாட்டுக்குள் தூள் கொண்டு வருவது திலிப்பா என எனக்கு தெரியாது. ஆனால் இந்த நாட்டுக்கு தூள் கொண்டு வருவது துமிந்தவும் அவரது அண்ணனும் என முழு நாட்டுக்கும் தெரியும். திலிப் குறித்து ரஞ்சன் ஒரு போதும் என்னோடு பேசியதேயில்லை. நாங்கள் தூள் குறித்து – ரேன குறித்து – துமிந்த குறித்து பேசியுள்ளோம். ஏன் அதெல்லாம் வெளிவரவில்லை?
நாங்கள் பேசியதிலிருந்து அவர்களுக்கு சார்பானதை மட்டும் போட்டு சார்பு இல்லாதவற்றை வெட்டியுள்ளார்கள். இவை தொடர்ந்தும் வரும்.
இதன் பாரதூர விளைவுகளை உணர வேண்டும். அக் காலத்தில் தயாசிரி ஜெசேகர போன்றோர் ….. திலங்க சுமத்திபால போன்றோர் …… எனது அப்பா கொலையான போது தூள்காரனென துமிந்துவை வசை பாடினார்கள். இப்போது திலங்க , துமிந்த தூள் விற்கவில்லை என்கிறார். தயாசிரி , துமிந்த அப்பாவி. அவரை விடுதலை செய்ய வேண்டும் என்கிறார். ஏன் இப்படி? இன்று நாட்டின் பிரதானி – நாட்டை நடத்திச் செல்வது கோட்டாபய ராஜபக்ச அல்ல. இன்று அரசியல் பலம் மகிந்த ராஜபக்சவிடம் இல்லை. முழு நாட்டையும் ரேண ஆட்டிப்படைக்கிறார். ரேணவிடம் இவர்களது கடிவாளமான தகவல்கள் உள்ளன. நாளைக்கோ அல்லது மறுநாளோ ரேணவுக்கு ஒரு சிறு வேலை மட்டும்தான் செய்ய உள்ளது. ரேணவின் தம்பி சார்பாக பேசாது போனால் இங்கிருக்கும் யாருடையதாவது ஒரு கிளிப்பை ( ஒலி – ஒளி) வெளியிட்டால் இவர்கள் நாய்க் குட்டி போல வாலை ஆட்டிக் கொண்டு ரேணவிடம் சரணடைவார்கள். நாளை ரேண பாராளுமன்றம் போக வேண்டும் என நினைத்தால் மகிந்தவிடம் போய் சொல்வார் தெரியும்தானே என்னிடம் உள்ள தகவல்கள் எனக்கு தேர்தலில் நிற்க டிக்கட் தாருங்க என்றால் மகிந்த தேர்தலில் நிற்க அனுமதிப்பார். விமல் – கம்மன்பிலவுக்கு சொல்வார் நீங்க ரெண்டு பேரும் ஒதுங்கியிருங்க . நான் கொழும்பில் முதலாவது தேர்வாக வர வேண்டும். நாய் மாதிரி இருங்கடா என்பார். ரேணவுக்கு பாராளுமன்ற பெரும்பான்யை பெற்று பிரதமராகவும் முடியும். ரேணவிடம் சாமான்கள் ( தகவல்கள் ) உள்ளன. ரேண பிரதமராகலாம். ஒரு தூள்காரன் பிரதமராவான். அது எப்படி ? இப்போது ரேணவிடம் பலம் உள்ளது. அதனால் இங்கிருக்கும் எல்லோரும் வெட்கப்பட வேண்டும். இங்கிருக்கும் அநேகர் என் அப்பா இறந்த போது வருந்தினார்கள். துமிந்தவை திட்டித் தீர்த்தார்கள். இவனை சிறைக்கு அனுப்ப வேண்டும் எனச் சொன்னவர்கள் இன்று துமிந்த அப்பாவி என்கிறார்கள். துமிந்த அப்பாவி இல்லை. நான் எங்குமே துமிந்த எனது அப்பாவை சுட்டதாக சொன்னதில்லை.ஷானியும் சொல்லவில்லை. ஷானி பெற்ற சாட்சிகளில் துமிந்த என் அப்பாவுக்கு வெடி வைத்ததாக இல்லை. துமிந்தவுக்கு முதல் சூடு விழுந்தது என உள்ளது. அதுவும் உண்மை. ஆனால் இப்படியான ஒரு சம்பவத்தை உருவாக்க துமிந்த காலை முதல் சம்பவம் நடக்கும் வரை அங்கிருந்தவர்களை கிளர்ந்தெழ வைத்தார். அதற்கான வியூகத்தை வகுத்தார். இது பிளான் செய்த கொலை. சாவு!
இந்த கொலைக்காக ஒரு வாகனத்தில் இருந்த ஆயுதங்களை இன்னோர் வாகனத்துக்கு மாற்றினர். அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இவை அத்தனையையும் துமிந்த செய்தார். அந்த கொலையை செய்ய ஆரம்பம் முதல் திட்டமிட்டு செயல்படுத்தியதற்காகத்தான் துமிந்தவுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. காரணம் அந்த திட்டம் ஒரு படு கொலையில் முடிவுறுவுதால்தான் …… இதுவே உண்மை.
இங்கே மறைப்பதற்கு ஒன்றுமில்லை. அப்படியில்லாமல் துமிந்த ஒன்றுமறியா பாலகனா? என் அப்பாவும் 3 பேரும் தனக்கு தானே தலையில் சுட்டுக் கொண்டார்களா? இங்கிருக்கும் அனைவருக்கும் அத்தனை உண்மையும் தெரியும். சொல்லவே வெட்கமாக உள்ளது . எல்லோரும் வாலை சுருட்டி உள்ளே ஓட்டிக் கொண்டு ஒதுங்கியிருக்கிறார்கள்.
ஏன்? இவர்களது கள்ள பொண்டாட்டிமார் பற்றி …… வெளிநாடுகளுக்கு போய் யார் யாரோடு இருந்தார்கள்? எப்படி பணம் சுரண்டி உழைத்தார்கள் எனும் அனைத்து விபரங்களும் ரெணோவுக்கு தெரியும். யாரை கொலை செய்தார்கள் – யார் உத்தரவிட்டது …..என அனைத்து விபரங்களும் ரெணோவுக்கு தெரியும். உண்மையாகவே வருத்தமாக உள்ளது. அச்சப்பட வேண்டியது எதிர்க் கட்சியில் இருக்கும் நாங்கள் அல்ல …. எமது நற்பெயருக்கு சேறடிப்பதை விட வேறெதுவும் இவர்களால் செய்ய முடியாது. ரேண , எங்களுக்கு சேறடிக்கும் அதே நேரம் உங்களுக்கு இன்னோர் உண்மை முகத்தை ரேண காட்டுகிறார். இனி ரேண தட்டும் தாளத்துக்கு நீங்கள் எல்லோரும் ஆட வேண்டி வரும். போய் மகிந்த ஐயாவிடம் சொல்லுங்க அவரையும் ரேண கையில் வைத்து ஆட்டுவார் என ….. அது இப்போதே நடக்கிறது. இல்லாவிட்டால் துமிந்தவுக்கு தூக்கு தண்டனை கொடுத்தவர்களை தூக்க வேண்டும் என நேற்று மகிந்த சொல்வாரா? கொலையாளி பத்மினி ரணவக்கவை தூக்கிலிட வேண்டும் என கொழும்பு முழுவதும் போஸ்ட்டர் ஒட்டியுள்ளார்கள். அவர் செய்த குற்றம் அவர் நீதிபதியாக நீதி வழங்கியதற்காகவா?
தொடரும் ……