ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் 100ஆவது தடவையாக இலங்கைக்கு வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார். ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயது நபரை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ருஹுனு சுற்றுலா பணியகத்தில் இடம்பெற்றது. சிங்கள மொழியை சரளமாகப் பேசக் கூடிய குறித்த நபர் 1971 ஆம் ஆண்டு 19 வயதில் முதன்முறையாக இலங்கைக்கு வந்துள்ளார். அதன் பிறகு ஜோர்ஜ் சீலன் ஆண்டுதோறும் பல தடவைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இதேவேளை, நூறாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறியுள்ளார்.