இதன்போது, வவுனியா வடக்கு ஓடைவெளி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் காய்த்து அறுவடைக்கு சில வாரங்களே இருந்த 1,700க்கு மேற்பட்ட பப்பாசி மரங்கள் காற்றில் முறிந்து விழுந்து அழிவடைந்துள்ளன.
அத்துடன், ஒலுமடு கிராம அலுவலர் பிரிவில் உள்ள விவசாயிகள் பலரின் வாழ்வாதாரமாக இருந்த பப்பாசி, வாழை, கத்தரி உள்ளிட்ட பயன்தரு மரங்களும் புகையிலை செடிகளும் காற்றில் முறிந்து அழிவடைந்துள்ளன.
தமது வாழ்வாதரமாக மேற்கொண்ட பயிர்கள் அழிவடைந்தமை காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.