அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 1,700 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் தோட்டத் தொழிலாளர்கள் கொழும்புக்கு படையெடுத்து தமது உரிமைக்காக போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பெருந்தோட்ட பயிர்ச்செய்கை காப்பகத்திற்கு முன்பாக, செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஏ.பி. சக்திவேல் தலைமை தாங்கி நடத்தினார்.
அங்கு கருத்துரைத்த ஏ.பி.சத்திவேல் “தொழிலாளர்கள் வியர்வை சிந்தி உழைப்பதால், தோட்டத் துறைமார்களும்,கம்பனிக்காரர்களும், இலட்சக்கணக்கான ரூபாய்க்களை சம்பளமாக மாதாந்தம் பெறுகின்றனர்.
தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி, இலட்சக்கணக்கில் அவர்கள் சம்பளம் பெரும்போது. தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வதற்கு நாளொன்றுக்கு 1,700 ரூபாய் சம்பளத்தை கொடுக்க சில தோட்ட கம்பனிகள் மறுப்பது கண்டிக்கத்தக்கது.
இந்நிலையில், கொழும்பு தேசிய நூதனசாலையின் முன்பாக அமைந்துள்ள இலங்கையின் பிரபல தொழில் அதிபரும், ஹேலிஸ் நிறுவன பங்குதாரரான தம்மிக்க பெரேரா வீட்டுக்கு முன்பாக 1,700 ரூபாய் சம்பள உயர்வை வழங்கக்கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“1,700 ரூபாய் சம்பள உயர்வை வழங்க முடியாத இவர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு எவ்வாறு நாட்டை கட்டியெழுபுவார்” என கோஷமிட்டு கேள்வியெழுப்பினர்.