ஜூலை 25ம் திகதியும் ஜூலை 27ம் திகதியும் வெலிக்கடை சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள், 43 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் கொல்லப்படடவர்கள் PLOTE , LTTE , TELO, EROS காந்தீயம் ஆகிய இயக்கங்களை சேர்ந்தவர்கள்.
இதில் EPRLF தோழர்கள் பாஸ்கரன், தேவா கொல்லப்பட்டனர். இந்த படுகொலையிலிருந்து தோழர் டக்ளஸ் தேவானந்தா, ஜெயக்கொடி – சோமுத்தோழர், யோகா தோழர் ஆகியோர் கடுமையான போராட்த்தின் பின் தம்மை பாதுகாத்துக்கொண்டனர்.
இதே நேரம் பணாக்கொடை தடுப்புமுகாமிலும் EPRLF தோழர்கள் வரதராஜபெருமாள் , மகேஸ்வரராஜா ஆகியோர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதன்பின்னர், லண்டனிலும் மற்றும் இடங்களிலும் எழுந்த பரவலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், இந்திய, மேற்குலக அரசுகளினதும், சர்வதேச மனிதஉரிமைகள் அமைப்பினதும் அழுத்தங்கள் காரணமாக எஞ்சிய சிறைக்கைதிகள் மட்டக்கிளப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.
லண்டனிலும் ஏனைய நாடுகளிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து – லண்டனிலிருந்து Dr ஆறுமுகம் (EROS ) தலைமையிலான UK, USA. Australia ஆகிய நாடுகளிருந்து – புலம் பெயர் தமிழர்கள் சார்பாக பிரதிநிதிகளை அழைத்து அப்போதைய இந்திய பிரதமர் திருமதி காந்தி அவர்கள் டெல்லியில் சந்தித்து பேசினார்.
அவர்கள் டெல்லியில் மேலும் பல அமைச்சர்களையும், பத்திரிகையாளர்களையும் சந்தித்தனர்.
ஏற்கனவே திரு அமிர்தலிங்கம் தலைமையிலான – TULF இனருடனும் , SJV. சந்திரகாசனுடனான இளைஞர் தொடர்புகளும் இந்திய அரசிற்கு இருந்ததது. ஆனால் புலம் பெயர் தமிழர்களின் ஆர்ப்பாட்ட நடவ்டிக்கைகள் இந்திய அரசிற்கும், இந்திரா காந்திக்கும் சர்வதேச ரீதியாக சிறி லங்கா தமிழர்களுக்கு நியாயமான தீர்வொன்று கிட்ட வேண்டும் என்கின்ற அழுத்தத்தை ஏற்படுத்த உதவியது.
ஜூலை கலவரத்தை தொடர்ந்து – லண்டனில் உள்ள சிறி லங்கா தூதுவராயத்தின் முன் நடைபெற்ற – எதிர்ப்பு ஆர்ப்படத்தில் – GUES – கலந்துகொண்ட படங்கள் சில.- இந்த படங்களில் உள்ள பெயர்கள், அந்த நாட்களில் பங்குபற்றியவர்களின் நினைவுகள், மேலும் நான் தவறவிட்ட தகவல்களை comment இல் பதிவு செய்யவும்