2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி காலை 10.30 மணிக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனை கொலை செய்த பிறகு, தீவரவாதம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை என ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச தலைமையில், “எலிய – ஒளிமயமான அபிலாசைகள்” என்ற பெயரிலான புதிய அமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
உணர்ச்சிகளை இழந்து. கை, கால் என உடல் உறுப்புக்களை இழந்து எமது இராணுவத்தினர் ஏன் யுத்தம் செய்தார்கள், இவ்வளவு துன்பத்தையும் அவர்கள் ஏன் தாங்கிக்கொண்டார்கள்?
இந்த நாட்டில் தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இத்தனை துயர்களையும் தாங்கிக்கொண்டார்கள் என தெரிவித்துள்ளார்.
முத்தையா முரளிதரனின் இலக்கை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை, சுசந்திகா ஜெயசிங்கவின் சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. எனினும் எமது இராணுவத்தினரின் சாதனைகள் பற்றி யாரும் பேசுவதில்லை என குறிப்பிட்டார்.
வடக்கு மக்களுடன் நாம் இருந்தோம். அவர்களுடைய மனநிலைகள் குறித்து எமக்கு தெரியும். அவர்கள் கோரியது மகிழ்ச்சியான வாழ்க்கையையே, அவர்கள் குடும்பத்துடன் வாழ்வதற்கான சந்தோசமான சூழலையே விரும்பினார்கள். மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் நாம் அவர்களுக்கு அந்த வாழ்க்கையை பெற்றுக்கொடுத்தோம், சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தோம், தற்போது வடக்கில் குண்டு வெடிக்கவில்லை, மக்கள் பயந்து பங்கர்களுக்குள் மறையவில்லை. எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கின்றார்கள்.
மேலும், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி காலை 10.30 மணிக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனை கொன்ற பிறகு, தீவரவாதம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை எனவும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.