கணிதம், விஞ்ஞானம், சமயம், தாய்மொழி, வரலாறு, ஆங்கிலம், தகவல் தொழில் நுட்பம் ஆகிய ஏழு பாடங்களுக்கு மட்டும் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்ற வேண்டும்.
தற்போது பரீட்சைப்பெறுபேறுகளில் உள்ள A,B,C என்ற வகைப்படுத்தல் இன்றி GPA முறை அறிமுகப்படுத்தப்படும். எந்த ஒரு மாணவனும் க.பொ.த. உயர்தரவகுப்புகளில் கற்காதிருக்க முடியாது.
தற்போது 11 ம் தரத்தில் நடாத்தப்படும் GCE O/L பரீட்சை 2026 ல் 10 ம் தரத்தில் நடாத்தப்படும். அதற்கேற்ற வகையில் 2025 ல் 09 ம் தரத்திற்கு வகுப்பேற்றம் செய்யப்படும்.
மாணவர்களுக்கு மேற்குறிப்பிட்ட 07 பாடங் கள் மட்டுமே வகுப்பில் கற்பிக்கப்படும். இதே போல் க.பொ.த. உயர்தர பரீட்சை 12 ம் வகுப்பில் நடாத்தப்படவுள்ளது.
இப்பரீட்சை 2027 ல் நடாத்தப்படவுள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தத்தின் அடிப்படையிலான முதலாவது பொதுப் பரீட்சையான க.பொ.த. சாதாரண தர பரீட்சை 2026 ல் நடாத்தப்படவுள்ளது.
இத்தகவலை கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார்