24 பெண்கள் நீரில் மூழ்கி பலி

வட இந்தியாவின் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களிலும், அண்டை நாடான நேபாளத்திலும்  இந்த மாதத்தில் ஜிவித்புத்ரிகா எனும் பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. மொத்தம் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் இந்த ஜிவித்புத்ரிகா பண்டிகையின்போது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக உண்ணாவிரதம் இருப்பார்கள்.

மூன்று நாள் உண்ணாவிரத முடிவில் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடி தங்கள் விரதத்தை  முடிப்பார்கள். அப்படி ஞாயிற்றுக்கிழமை (08) நடந்த  இந்த பண்டிகையின்போது நீர் நிலைகளில் நீராடிய  பெண்கள் 24 பேர் பலியாகினர்.