இவ்விடயம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை நிலவும் பட்சத்தில் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையில் தாதியர் சேவை தொடர்பான அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் சுகாதார அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் பணிப்புரைகளை விடுத்துள்ளார்.
அதன்படி, 2018 ஆம் ஆண்டு தாதியர் பயிற்சிக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சுமார் 2,500 தாதியர் பயிற்சியாளர்களையும், 500 தாதியர் பட்டதாரிகளையும் சேவையில் இணைத்துக் கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2019/2020 உயர்தரப் பிரிவில் தாதியர் பயிற்சிக்கான விண்ணப்பங்களை அழைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை செப்டம்பர் நடுப்பகுதிக்குள் வெளியிட சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.