மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் ட்றூப்,கொரின் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 450 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீடுகளில் இருந்தவாறே தொழிலுக்குச் செல்லாமல் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இத்தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு வழமையாக அறவிட்டு வந்த மரண பணம் தற்போது அறவிடுவதில்லை. தொழிலாளர்கள் 100 சதவீதம் வேலை செய்தால் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படும் தேயிலை தூள் வழங்கப்படுகிறது.
அதில் 2 நாட்கள் குறைந்தாலும் தேயிலை தூள் வழங்கப்படுவதில்லை. ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்கப்படுவதில்லை.
தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூட்டுறவு சங்க பணம் கம்பனி வழங்கினால் மாத்திரமே வழங்கப்படுகின்றமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை இத்தோட்ட மக்கள் எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.