3 இலட்சம் அமெரிக்க டொலருக்கு அதிகமாக இலங்கையில் முதலிட தயாராக இருக்கும் வௌிநாட்டு பிரஜைக்கு, இந்த நாட்டில் 5 வருடங்களுக்கு தங்கியிருப்பதற்கான விசா வழங்கப்படும்” என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த தீர்மானமானது, 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டள்ள, வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரபிரசாதங்களைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்துடன் தொடர்புப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்த சட்டம், இன்றும் சில வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக நிதியமைச்சர் மேலும் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு இந்தத் தொகை 5 இலட்சம் என்று செய்திகள் வந்ததை வாசகர்கள் அறிவர்