டெய்லி மிரர் அழைப்பிதழை NPPயின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஏற்றுக்கொண்டார், NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க விவாதத்திற்குத் தயாராக இருப்பதாகவும் அதில் கலந்துகொள்வார் என்றும் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் டெய்லி மிரர் உத்தியோகபூர்வ அழைப்பிதழை கையளித்ததுடன் பங்கேற்பதற்கான மறுமொழியைப் பெற குழு எதிர்பார்த்துள்ளது.
சஜித் பிரேமதாசவுக்கு அழைப்புக் கடிதம் கிடைத்துள்ளதை எனினும் நேற்று மாலை உறுதிசெய்த பிரேமதாசவின் அலுவலகம், விவாதங்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாளும் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவுக்கு அதனை அனுப்பி வைத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பிதழ் விரைவில் கையளிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை வெற்றி பெற்றால் தாம் நாட்டுக்கு ஆற்றவுள்ள பணி , பொருளாதாரம் மற்றும் அரசியல் கொள்கைகள் மேலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்கள் குறித்த நேரலை விவாதம் ஒன்றை மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களையும் கொண்டு நடாத்த டெய்லி மிரர் மற்றும் லங்காதீப கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி அவர்களுக்கு அழைப்பிதழ்களை அனுப்பி வைத்தது.
இந்த நேர்காணல் டெய்லி மிரர், லங்காதீப ,தமிழ் மிரர் மற்றும் சண்டே டைம்ஸ் டிஜிட்டல் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
மூன்று வேட்பாளர்களும் அழைப்பிதழ்களை ஏற்றுக்கொண்டவுடன் விவாதத்தை நடத்துவதற்கான திகதி மற்றும் நேரம் குறித்த நேரத்தில் அறிவிக்கப்படும்.