நாட்டில் தற்போது நிலவும் மோசமான காலநிலையை கவனத்தில் கொண்டு, எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடத்துவதற்கு ஏற்கெனவே, திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகளே பிற்போடப்பட்டுள்ளன. அவ்வாறு பிற்போடப்பட்டுள்ள பரீட்சைகள், அடுத்தமாதம் 21,22 மற்றும் 23 ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன.