பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சீனப் பிரதமர் லீ கெகியாங்குக்கும் இடையில் ஏப்ரல் மாத இறுதியில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னர் இந்த உதவித்தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்களை சீனா உணர்வதாகவும் நாட்டில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தங்களால் முடிந்த உதவியை தாங்கள் செய்ய விரும்புகிறோம் என்று சீன பிரதமர் தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய இந்த நிவாரணத்துடன் சேர்த்து சீனாவின் மொத்த உதவித் தொகையை 500 மில்லியன் யுவான்கள் (ஏறத்தாழ 76 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.