நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 4 மாவட்டங்களுக்கு 16 பேரிடர் மீட்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, கடற்படை தெரிவித்துள்ளது. அம்பாறை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், உதவி வழங்குவதற்காக இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதேவேளை, வட பிராந்தியத்திலுள்ள பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சைக்கான வினாத்தாள்களை மீண்டும் கொண்டு வருவதற்கு, பெல் 212 ரக ஹெலிகொப்டர் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.