நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து, சந்தேகத்தின் பேரில் இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என,பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சொந்தமானதெனக் கூறப்படும் ஒரு தொகை தங்க நகைகளை, 300 இலட்சம் ரூபாய்க்கு பேரம் பேசி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவர் நேற்றிரவு (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.