வாகன விபத்துகளால் கடந்த 5 நாள்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதிக்குள் 399 விபத்துகள் ஏற்பட்டுள்ளதுடன், இதில் 669 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மதுபோதையில் வாகனம செலுத்திய 1834 சாரதிகளும் கடந்த 5 நாள்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனரென அவர் மேலும் தெரிவித்துள்ளார்