கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் வசித்து வருகிறார். தொழிலதிபரான இவருக்கு மனைவியும் மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். மகன் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏவாக உள்ளார். தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
தயாநிதி மாறன் மத்திய சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் அக்கா மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறனின் இளைய மகன் தயாநிதி மாறன். 1966 டிசம்பர் 5-ம் தேதி பிறந்தவர். தாய் மல்லிகா. பிரியா என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. (பொருளாதாரம்) படித்தவர். தந்தையின் மறைவால் அரசிய லுக்கு வந்தவர். 2004 மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் வென்று மிக இளைய வயதிலேயே மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சரானார். 2009 தேர்தலில் மத்திய சென்னையில் மீண்டும் வென்று மத்திய ஜவுளித் துறை அமைச்சரானார். இருமுறை மத்திய சென்னையில் வென்றவர், கடந்த 2014-ல் தோல்வி அடைந்தார். 4-வது முறையாக மீண்டும் மத்திய சென்னையில் களமிறங்குகிறார்.
கலாநிதி வட சென்னை: தமிழக முன்னாள் அமைச்சரும், திமுகவில் பொருளாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்த வருமான ஆற்காடு வீராசாமியின் மகனான டாக்டர் கலாநிதி, சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டமும், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பிளாஸ்டிக் சர்ஜரியில் எம்.எஸ். பட்டமும் பெற்றவர். 49 வயதான கலாநிதி, திமுக மருத்துவர் அணியின் துணைத் தலைவராக இருக்கிறார். முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
த.சுமதி (எ) தமிழச்சி தங்க பாண்டியன் தென் சென்னை: முன்னாள் அமைச்சர் வி.தங்கபாண் டியனின் மகள் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன், விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தில் பிறந்தவர். இவரது சகோதரர் தங்கம் தென்னரசு தமிழக அமைச்சராக இருந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை ராணிமேரி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது கணவர் சந்திரசேகர் ஐபிஎஸ் அதிகாரி. இரு மகள்கள் உள்ளனர். கவிஞர், எழுத்தாளரான இவர் எஞ்சோட்டுப் பெண், வனப்பேச்சி, பேச்சரவம் கேட்டிலையோ, மஞ்சணத்தி ஆகிய கவிதை தொகுப்புகளையும், பல்வேறு கட்டுரை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். முதல் முறையாக தேர்தலில் போட்டி யிடுகிறார்.
ஜி.செல்வம் – காஞ்சிபுரம்: 40 வயதான சிறுவேடல் ஜி.செல்வம்(44) விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை பெயர் வி.கணேசன். 1996-ம் ஆண்டு ஒன்றியப் பிரதிநிதியாகவும், 2002-ம் ஆண்டு வாலாஜாபாத் ஒன்றிய இணை அமைப்பாளராகவும், 2008-ம் ஆண்டு மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பாளராகவும் கட்சிப் பதவியில் இருந்தார். தற்போது அவர் வாலாஜாபாத் மேற்கு ஒன்றியச் செயலாளராக உள்ளார். எம்.காம், எம்.பில், எல்.எல்.பி படித்தவர். கடந்த முறை இவர் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.