கல்வி அதிகாரிகள் பாடசாலைகளுக்கு விஜயம் செய்து கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், வரவு அறிக்கைகளுடன் கண்காணித்து பட்டியலையும் அறிக்கைசெய்தனர். மாணவர், அதிபர், ஆசிரியர் மற்றும் கல்வி சாரா ஊழியர்களின் வரவு என்பன முக்கியமாகக் கவனிக்கப்பட்டது.
அதேவேளை, பொலிஸாரும் சகல பாடசாலைகளுக்கும் சென்று காலை முதலே கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், வரவு அறிக்கைகளையும் பெற்றுக்கொண்டனர்.
கிழக்கிலுள்ள 13 வலயங்களிலும் பாடசாலைகள் திறக்கப்பட்டன என்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 36 பாடசாலைகள் திறக்கப்பட்டதாக வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரன் தெரிவித்தார்.
அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் 168 பாடசாலைகளும் கிண்ணியா வலயக் கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் 31 பாடசாலைகளும் திறக்கப்பட்டிருந்தன.