7ஆம் திகதி சென்னை வருகிறார் சசிகலா

சசிகலாவின் உறவினர்கள் அவரை கவனித்துக் கொள்கின்றனர். இதனால் சொகுசு விடுதியில் சசிகலா உறவினர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட வில்லை. ஒரு வாரம் தனிமைக்கு பிறகு சசிகலா வருகிற 7ஆம் திகதி சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.

காலை 7.30 அளவில் சசிகலா பெங்களூருவில் இருந்து புறப்படுகிறார். கர்நாடக-தமிழக எல்லையில் அத்திப்பள்ளி அருகே சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரமாண்டமான மைதானம் தயார்படுத்தப்பட்டு வருகிறது.பெங்களூருவில் சசிகலா தங்கி இருக்கும் விடுதியில் இருந்து அத்திப்பள்ளிவரை கர்நாடக மாநில அ.ம.மு.க. சார்பில் டிஜிட்டல் பேனர்கள், வரவேற்பு வளைவுகள் அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.

பெங்களூருவில் புறப்படும் சசிகலா அன்று மாலை சென்னையை வந்தடைகிறார். சென்னை வந்ததும் அவர் நேராக ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஜெயலிலிதா நினைவிடம் தற்போது அரசின் பராமரிப்பில் உள்ளது. நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு சசிகலா அதிரடி அரசியல் நடவடிக்கைகளை தொடங்குவார் என அ.ம.மு.க. வட்டாரங்கள் கூறுகின்றன.