முதலில் நடைபெற்ற ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியில் பல்வேறு ஹாலிவுட் நடிகைகள் அழகு பதுமைகளாக உடையணிந்துக் கொண்டு விருது விழாவை கண்கவர் நிகழ்ச்சியாக மாற்றினர்.
சிறந்த நடிகர் சிலியன் மர்பி
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஓபன்ஹெய்மர் திரைப்படம். அணுகுண்டை தயாரித்த ஜே. ராபர்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவானது.
ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா நாகசாகி நகர்களின் மீது அணுகுண்டு போடப்பட்டு பல லட்சம் உயிர்கள் பலியாக தான் காரணமாகி விட்டோம் என வருந்தும் காட்சிகளிலும், இந்த உலகமே அழியப்போகுது என நினைக்கும் காட்சிகளிலும் தனது நடிப்பால் சிலியன் மர்பி அசத்தியிருந்தார். அந்த படத்துக்கு சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஒஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சிறந்த இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்
இன்செப்ஷன், டெனட் உள்ளிட்ட பல சிறப்பான படங்களை இயக்கி உலகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள கிறிஸ்டோபர் நோலன் முதல் முறையாக சிறந்த இயக்குநர் விருதை ஓபன்ஹெய்மர் படத்துக்காக வென்றுள்ளார்.
மொத்தம் 7 விருதுகள்
சிறந்த இயக்குநருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலன் வென்றார். சிறந்த படத்துக்கான விருதும் ஓபன்ஹெய்மர் படத்துக்குத்தான் கிடைத்தது. சிறந்த நடிகருக்கான விருதை சிலியன் மர்பியும் சிறந்த துணை நடிகருக்கான விருதை ராபர்ட் டவுனி ஜூனியரும் வென்றனர். மேலும், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட 7 விருதுகள் ஓபன்ஹெய்மர் படத்துக்கு கிடைத்தது.