யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பயன்படுத்தி இந்திய மீன்பிடி படகுகள் இரண்டும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் வழமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
2023ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீன்பிடி படகுகளுடன் 74 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சட்ட நடவடிக்கைகள் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் கடற்படை மற்றும் கடலோர காவல் துறையினர் தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இலங்கை கடற்படை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.